Hollywood Cinema news
தலைவன் கம்மிங்! – அவெஞ்சர்ஸ் அடுத்த பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்பைடர்மேன்!
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உள்ள கதாநாயகர்களிலேயே உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து காசுக்கு போராடும் ஒல்லி தேகம் கொண்ட ஒரு கதாநாயகன் என்பதால் ஸ்பைடர்மேன் இளைஞர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகும் கதாபாத்திரமாக உள்ளது.
இறுதியாக வந்த ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தில் இதுவரை வந்த அனைத்து ஸ்பைடர்மேனையும் இணைத்து ஒரு புது காம்போவை கொடுத்திருந்தனர். ஆனால் அந்த படத்தில் பீட்டர் பார்க்கர் தனது அத்தை ஆண்ட் மேவை இழந்து விட்டார். மேலும் பீட்டர் பார்க்கரை இந்த உலகமே மறந்துவிட்டது.
இந்த நிலையில் அடுத்து பீட்டர் பார்க்கர் என்ன செய்ய போகிறார் என்பதொடு அந்த படம் முடிந்தது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் புது அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கும் பணிகள் நடைப்பெற்று கொண்டுள்ளன. அவெஞ்சர்ஸ் காங் டைனஸ்டி மற்றும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் என்கிற இரு படம் தயாராகி வருகிறது.
இதில் காங் டைனஸ்டியில் லீட் ரோலில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் வருகிறதாம். எப்படியும் மாஸான ஒரு கதாபாத்திரமாக ஸ்பைடர் மேன் இருப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.