Connect with us

மாஸ் காட்டும் ஜேசன் சஞ்சய்.. சுதீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு வந்த வீடியோ..!

Tamil Cinema News

மாஸ் காட்டும் ஜேசன் சஞ்சய்.. சுதீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு வந்த வீடியோ..!

Social Media Bar

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுதீப் கிஷன் நடித்து வரும் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகர் விஜய்க்கு சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் கதாநாயகனாக நடிப்பதை விடவும் இயக்குனராக இருப்பதற்குதான் அதிக விருப்பம் காட்டி வருகிறார் ஜேசன் சஞ்சய். இதனை தொடர்ந்து அவர் படம் இயக்குவதற்கு லைக்கா நிறுவனம் உதவி புரிந்தது. தற்சமயம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சுதீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் வீடியோ ஒன்று தற்சமயம் சுதீப் கிஷன் பிறந்தநாளை ஒட்டி வெளி வந்துள்ளது. அதில் ஜேசன் சஞ்சயே பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருக்கிறார்.

அந்த ட்ரைலர் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

To Top