பொண்ணு விஷயத்தில் சிக்கிய மார்வெல் வில்லன் நடிகர்!.. வாய்ப்பு கிடைகிறது கஷ்டம்!..

Marvel Kang Dynasty: ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களை வைத்து திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் மார்வெல். காமிக்ஸ் நிறுவனமாக இருந்த மார்வெல் தற்சமயம் தொடர்ந்து அந்த காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்டு திரைப்படங்களை எடுத்து வருகிறது.

மார்வெல் யுனிவர்ஸில் ஏற்கனவே தானோஷை வைத்து எடுத்த அவெஞ்சர்ஸ் பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் அதற்கு பிறகு எடுத்த திரைப்படங்கள் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் தானோஸிற்கு சமமான ஒரு வில்லனாக காங் என்னும் வில்லனை உருவாக்கி வந்தது மார்வெல். அவெஞ்சர்ஸ் காங் டைனஸ்டி என்னும் படத்தில் புது அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களும் காங்கும் மோதி கொள்வதாக கதை அமைப்பதற்கான வேலைகள் சென்று கொண்டிருந்தன.

Social Media Bar

இதனை தொடர்ந்து லோக்கி சீரிஸ் மற்றும் ஆண்ட் மேன் படங்களில் முக்கிய வில்லனாக காங்கை இறக்கி இருந்தனர். ஜோனதன் மேஜர்ஸ் என்னும் நடிகர்தான் இந்த காங் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது பாலியல் புகார் எழுந்த காரணத்தினால் அவரை மார்வெல் நிறுவனம் தனது படங்களில் இருந்து நீக்கியுள்ளது.

அவருடைய பழைய காதலி கிரேஸ் ஜேப்பரியின் மீது ஒழுக்கமற்றும் வன்முறையாகவும் நடந்துக்கொண்டதாக குற்றம் பதிவாகி கடந்த டிசம்பர் 18 அன்று அது நிரூபணமும் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரை மார்வெல் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த கதாபாத்திரத்தில் வேறு ஆளை நடிக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஜானி டெப் மீது வன்முறை புகார் எழுந்தப்போது ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து அவரை நீக்கியது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம்.