உச்ச பட்ச கவர்ச்சியில் மேடையேறிய அனிரூத் ரீல் காதலி.. ஆடிப்போன ரசிகர்கள்.!
அனிரூத் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவர் அமைக்கும் இசைகள் எல்லாம் தற்கால தலைமுறையினருக்கு பிடித்த வகையில் இருக்கின்றன. இதனாலேயே பெரும்பாலும் அனிரூத்தின் இசையில் வரும் பாடல்கள் எல்லாம் பெரும் வெற்றியை கொடுத்துவிடுகின்றன.
இதனால் பெரிய பெரிய நடிகர்கள் கூட தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் அனிரூத் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடகி ஜொனிட்டா காந்தி.
பொதுவாக கதாநாயகிகளுக்கு இருப்பது போன்ற ரசிகர்கள் பட்டாளம் என்பது பாடகிகளுக்கு இருக்காது. ஆனால் ஜொனிட்டா காந்திக்கு மிகப்பெரிய ரசிக பட்டாளம் இருந்து வருகிறது. அனிரூத் டான் படத்தில் ஒரு பாடலை ஜொனிட்டாவை பாட வைத்தார்.
அதற்கு பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் வரும் அரபி குத்து பாடலையும் ஜொனிட்டாதான் பாடினார். அப்போது லிரிக் வீடியோவில் வந்த ஜொனிட்டாவை பார்த்து அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள் பலர். அந்த சமயத்தில் தொடர்ந்து அனிரூத்தோடு சேர்ந்து தோன்றியதால் அவரை அனிரூத் காதலி என்றும் அப்போது கூறி வந்தனர்.
தமிழை விடவும் ஜொனிட்டா பாலிவுட்டில் மிக பிரபலமானவர். இவர் நடிகைகளை போலவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுபவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பாடல் கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார் ஜொனிட்டா.
அந்த நிகழ்ச்சியில் அவர் உடுத்தி வந்த கவர்ச்சி உடைதான் இப்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.