Actress
சினிமா ஆசையில் கவர்ச்சி கண்ணியாக மாறத் துடிக்கிறாரா பிக் பாஸ் பிரபலம்? இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் தான் என்ன?
நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்து க்யூட்டாக வலம் வந்தவர் தான் வனிதா விஜயகுமார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், நடிகர் ஆகாசை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் ஆகாசை பிரிந்த இவர், ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை.

இவரது மிக நீண்ட திருமண கதை ஒருபுறம் இருக்க, சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்த வனிதா, அப்பா, அம்மா, அக்கா, தங்கை என அனைத்து சொந்தபந்தத்தையும் விட்டு விட்டு, மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா, தற்போது கணிசமான படங்களில் கமிட் ஆகி இருகிறார்.

அதுமட்டுமில்லாமல், தன்னை போலவே தன் மகளும் கதாநாயகி ஆக வேண்டும் எனவும் வனிதா ஆசைபடுகிறாராம். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற, அம்மாவை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோவிக்கா அம்மாவை போலவே பேசி பல சர்ச்சைகளிலும் மாட்டிகொண்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த ஜோவிக்கா,அம்மாவின் ஆசையை தீர்த்து வைக்க, குட்டை உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து இன்டகிராமில் பதிவிட்டு வருகிறார். கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் இவரின் போட்டோவைப் பார்த்து பட வாய்ப்புகள் வருகிறதோ என்னவோ, கமென்ட்களில் நெட்டிசன்களின் கமென்ட் மட்டும் குவிந்த வண்ணம் உள்ளது.சிலர் வயதுக்கு மீறிய கவர்ச்சி என்றும் ஒரு சிலர் என்ன ஜோவிகா இப்படி மாறிட்டாரே? என்றும் வாய்பிளந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

