Connect with us

நான் சொன்னாத்தான் ரஜினிக்கு வசனம் எழுதனும் வசனகர்த்தாவுக்கு கமல் போட்ட ஆர்டர்!…

Cinema History

நான் சொன்னாத்தான் ரஜினிக்கு வசனம் எழுதனும் வசனகர்த்தாவுக்கு கமல் போட்ட ஆர்டர்!…

Social Media Bar

Rajini and Kamal : எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, இவர்களைப்போல தமிழ் சினிமாவை கட்டி இழுக்கும் இரண்டு காளைகள் போல ரஜினி மற்றும் கமல் இருவரும் ஆதிக்கம் செலுத்திய காலம் ஒரு காலம்.

இருவருடைய  படங்கள் பலமுறை ஒரே நாளில் திரைக்கு வந்ததும் உண்டு. தமிழ் சினிமாவை ஆண்ட ஜாம்பவான்கள் தான் இவர்கள். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஒரு வசனகர்த்தா கிரேஷி மோகன்.

அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். கிரேஷி மோகனின் வசனம் என்றால் அந்த படத்தில் நடிப்பு இல்லை என்றாலும் வசனம் அப்படத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்பார்கள் அப்படிப்பட்ட நகைச்சுவை கலந்த ஒரு வசன எழுத்தாளர்.

தான் எழுதும் வசனத்திலே ஒட்டுமொத்த உணர்வையும் வைத்து எழுதக்கூடிய ஒருவர். ஒரு நாள் ரஜினி கிரேஷி மோகனுக்கு போன் செய்து தன் படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என்று அழைத்திருக்கிறார். முதலில் போன் எடுத்து பேசும் போது ரஜினிதான் பேசுகிறார் என்று கிரேஷி மோகன் நம்பவேயில்லை.

பிறகு ரஜினி அழைத்த போது சார் நான் கமல் சாரிடம் கேட்டுவிட்டு உங்களுக்கு வசனம் எழுதுகிறேன் என்றார். ரஜினிக்கும் புரியவில்லை பிறகு சார் கமல்ஹாசனுடன் 9க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிவிட்டேன் அவர் அடுத்த படத்திற்கு  எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்க வாய்ப்புள்ளது அதனால் அவரிடம் கூறிவிட்டு வருகிறேன் என்றார்.

ரஜினியும் சரி கமலிடம் சொல்லிவிட்டு நாளை வாருங்கள் என்றாராம். அடுத்தநாள் கிரேஷி மோகன் கமல்ஹாசனை சந்திக்க சென்றிருக்கிறார். கிரேஷி மோகன் கமல்ஹாசனை சந்திப்பதற்கு முன்பே ரஜினி இந்த விசயத்தை கமலிடம் கூறிவிட்டார் அதனால் இவரை பார்த்ததும் கமல், ரஜினி படத்திற்கு வசனம் எழுதப்போகிறீர்கள் என்று கிண்டல் செய்திருக்கிறார்.

உங்களிடம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன் என்றாராம் மோகன். கமலும் சரி நன்றாக வசனம் எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். .

Articles

parle g
madampatty rangaraj
To Top