அடுத்த வருடம் படம் நடிக்கவில்லை.. நடிகர் கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு..! இதுதான் காரணம்.!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மட்டும் எப்போதுமே வித்தியாசமான நடிகராகதான் பார்க்கப்படுகிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக கமல்ஹாசன் இருந்துள்ளார். ஆனாலும் கூட சமீபகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கனவே அவரது நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படமும் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

kamalhaasan
kamalhaasan
Social Media Bar

எனவே கமல்ஹாசன் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது அடுத்த வருடம் ஆகஸ்ட் வரையில் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் உண்மையில் கமல்ஹாசன் நடிக்காமல் போனதற்கு காரணம் இந்த தொடர் தோல்விகள் இல்லையாம். அடுத்த வருடம் தேர்தலுக்கு கமல்ஹாசனுமே தயாராகி வருகிறாராம். அதனால்தான் அவர் திரைப்பட படப்பிடிப்புகளை கொஞ்சம் ஒத்தி போட்டுள்ளார் என கூறப்படுகிறது.