Connect with us

4 நாள் கமலை கட்டி தொங்கவிட்டோம்.. அடப்பாவிகளா.. வயசான காலத்துல.. இந்தியன் 2வில் கமலுக்கு நடந்த கொடுமை..

indian 2

News

4 நாள் கமலை கட்டி தொங்கவிட்டோம்.. அடப்பாவிகளா.. வயசான காலத்துல.. இந்தியன் 2வில் கமலுக்கு நடந்த கொடுமை..

Social Media Bar

வயதை பொருத்துதான் நடிகர்களுக்கான சண்டை காட்சிகள் என்பது திரைப்படங்களில் அமைகிறது. இளமை காலங்களில் அவர்களை வைத்து எவ்வளவு பெரிய வித்தைகளை வேண்டுமானாலும் காட்டலாம்.

ஆனால் வயது ஆக ஆக உடலில் தளர்ச்சி ஏற்படும். எலும்புகளின் வலு குறையும் இந்த நிலையில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கான காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு லெவலுக்கு பிறகு ஆக்டிவான டான்ஸ் காட்சிகளிலோ அல்லது பயங்கரமான சண்டை காட்சிகளிலோ நடிப்பதை பார்க்க முடியாது.

கமலுக்கு வந்த அவதி:

அதற்கு என்ன காரணம் என்றால் அவருடைய உடல் அதற்கு ஒத்துழைக்காது என்பதுதான். இதனால்தான் ரஜினி நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் சண்டை காட்சிகளில் அவர் பெரிதாக மெனக்கெடுவது போல காட்சிகள் இருக்காது.

indian-2
indian-2

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலை படாதபாடு படுத்தி இருக்கிறார். கமலே ஒரு முறை பேட்டியில் கூறும் பொழுது இதுவரை நான் நடித்த திரைப்படங்களிலேயே நான் இவ்வளவு கஷ்டப்பட்ட படம் இந்தியன் 2 திரைப்படம் மட்டும் தான் என்று கூறியிருந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் சம்பவம்:

சரி மேக்கப் விஷயத்தில் நிறைய வேலைகள் நடந்ததால் கமல் இப்படி சொல்கிறார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் சண்டைக் காட்சிகளில் கூட கமலை வைத்து செய்திருக்கிறார் ஷங்கர் என்று கூறப்படுகிறது.

நான்கு நாட்கள் ஒரு காட்சி படம் பிடிக்கப்பட்டது. அப்பொழுது நான்கு நாட்களும் கமலை கயிற்றில் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று இல்லாமல் நான்கு நாட்களும் காலையிலிருந்து இரவு வரை அந்த காட்சி அப்படியே படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை சிலாகித்து இயக்குனர் ஷங்கர் ஒரு பக்கம் கூறினாலும் ஒரு மூத்த முதிய நடிகரை இப்படி அவதிக்குள்ளாக்குவது சரியா என்பது கமலின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி ஆகியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top