Connect with us

ஓடாத கமல் படத்துக்கு வெற்றி விழாவா? எம்.ஜி.ஆர் வரைக்கும் வந்ததற்கு காரணம் என்ன?

kamal mgr

Cinema History

ஓடாத கமல் படத்துக்கு வெற்றி விழாவா? எம்.ஜி.ஆர் வரைக்கும் வந்ததற்கு காரணம் என்ன?

Social Media Bar

MGR and Kamalhaasan: பொதுவாகவே 100 ஆவது திரைப்படம் என்பது திரை பிரபலங்களுக்கு ராசி இல்லாத திரைப்படம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு 100 ஆவது திரைப்படம் வெற்றியை தராது. ரஜினிக்கு 100 ஆவது திரைப்படமாக ஸ்ரீ ராகவேந்திரா இருந்தது. அது வெற்றியடையவில்லை.

அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு 100 ஆவது படமாக ராஜப்பார்வை என்கிற திரைப்படம் இருந்தது. ராஜப்பார்வை திரைப்படம் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான திரைக்கதைகளை தேடி நடிப்பவராக இருக்கவில்லை.

அவர் ரஜினிகாந்த் போலவே சண்டை காட்சிகளை கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். ராஜப்பார்வை பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறவில்லை என ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

அதே சமயம் அந்த படத்திற்கு 100 ஆவது நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் வருகை தந்துள்ளார். மிக சிறப்பாக இந்த விழாவானது நடந்துள்ளது. இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் சங்கதியாக உள்ளது.

நல்ல வசூலை கொடுக்காத ஒரு திரைப்படத்திற்கு எப்படி 100 ஆவது நாள் விழா நடத்தினார்கள். இதுக்குறித்து சினிமா பிரபலம் சித்ரா லெட்சுமணன் கூறும்போது உண்மையாகவே ராஜப்பார்வை திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை.

ஆனால் அதே சமயம் அந்த திரைப்படம் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர்கள் அந்த சமயத்திலும் படத்தை கொண்டாடி வந்தனர். கமல்ஹாசனின் 100 ஆவது திரைப்படத்தை 100 நாட்கள் ஓட்டியாக வேண்டும் என்று ஒரு திரையரங்கில் மட்டும் அந்த படத்தை 100 நாட்கள் ஓட செய்தனர். அதனால்தான் அந்த படம் தோல்வி படமாக இருந்தப்போதும் கூட அதற்கு 100 ஆவது நாள் விழா நடத்தினர் என கூறுகிறார்.

To Top