எல்லாருக்கும் வீடு கட்டுறது ஆசைனா எனக்கு இதுதான் ஆசை.. அதுக்காக துக்கம் விசாரிச்சாங்க.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று போராடியவர் நடிகர் கமல்ஹாசன். அப்படியாக கமலஹாசன் தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டு வந்த ஒரு சில திரைப்படங்களில் ஹேராம் முக்கியமான திரைப்படம்.

ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் இருவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது இந்தியாவில் ஏற்பட்ட மத கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்போதைய சமகாலத்தில் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தால் திரைக்கு வந்திருக்காது என்று கூறலாம். அந்த அளவிற்கு இப்பொழுது திரை துறையில் கட்டுப்பாடுகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் அப்பொழுது அதை சாத்தியப்படுத்தி இருந்தார் கமல்ஹாசன்.

ஹே ராம் குறித்து கமல்ஹாசன்

kamalhaasan
kamalhaasan
Social Media Bar

ஆனால் விமர்சன விமர்சன ரீதியாக அதனால் நிறைய பிரச்சனைகளை கமலஹாசன் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் அவரிடம் இது குறித்து ஒரு பேட்டியில் கேட்ட பொழுது அவர் அதற்கு அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அதில் கமல்ஹாசன் கூறும் பொழுது திரைத்துறைக்கு வரும்பொழுதே இந்த மாதிரியான ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. அதற்குண்டான பணம் அப்பொழுது இல்லை ஆனால் அதற்குண்டான பணம் வந்த பிறகும் கூட நான் மிக தாமதப்படுத்தி இப்பொழுது தான் அந்த படத்தை எடுத்திருக்கிறேன்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கும் வீடு கட்ட வேண்டும் கார் வாங்க வேண்டும் என்பது போல எனக்கு இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அப்போது பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பது போல பேசினார்கள் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.