Cinema History
பாட்டு போட சொன்னா சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. சிவாஜி கணேசன் படத்தில் கண்ணதாசன் செய்த சம்பவம்!
தமிழ் திரையுலகில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கண்ணதாசன். இயற்கையாகவே கண்ணதாசனுக்கு கவிதைகள் ஊற்று போல வரும் என கூறுவார்கள். அந்த அளவிற்கு கவிதை எழுதுவதில் திறன் பெற்றவர் கண்ணதாசன்.
கிட்டத்தட்ட திரையில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் சம்பாதிக்கும் அளவிற்கு கண்ணதாசனும் சம்பாதித்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரிக்கலாம் என முடிவு செய்திருந்தார். அந்த படத்திற்காக அதிகமாக கடன் வாங்கியிருந்தார் கண்ணதாசன்.
அதே போல வேறு சிலர் கடன் வாங்குவதற்கும் இவர் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் சுமையாக ஆனது கண்ணதாசனுக்கு, இந்த நிலையில் பாவமன்னிப்பு என்னும் திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதி வந்தார் கண்ணதாசன்.
அப்போது அவரது வாழ்க்கை நிலையை குறிப்பிடும் வகையில் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றார் என்று பாடியிருந்தார் கண்ணதாசன்.
