Cinema History
எல்லா கச்சேரிலையும் நான் சொல்ற பாட்டைதான் பாடணும்!.. எம்.எஸ்.விக்கு கண்ணதாசன் போட்ட கண்டிஷன்!..
Kannadasan and MSV : தமிழில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிகவும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். இசைக்கு ஒரு இளையராஜா இருந்தது போல பாடலாசிரியர்களில் முதன்மையானவராக கவிஞர் கண்ணதாசன் இருந்தார். இதனாலேயே தொடர்ந்து அவரது பாடல் வரிகளுக்கு அதிக மதிப்பு இருந்து வந்தது.
கண்ணதாசனுக்கு எதிர்மறையான சில பழக்கங்கள் இருந்தப்போதும் அவருக்கு இருந்த திறமை காரணமாக தமிழ் சினிமாவில் வெகுவாக பாரட்டப்பட்டார். கண்ணதாசனும் எம்.எஸ் விஸ்வநாதனும் இணைந்து உருவாகும் பாடல்கள் எல்லாமே அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன.
கண்ணதாசன் என்னதான் அதிக மதுப்பழக்கம் கொண்டிருந்தாலும் கடவுள் மீது அதிக பக்தி உள்ளவராக இருந்தார். அர்த்தமுள்ள இந்துமதம் என்று புத்தகமே எழுதியுள்ளார். இந்த நிலையில் ஒரு பக்தி ஆல்பம் பாடலுக்கு பாடல் வரிகளை எழுதுவதற்கான வாய்ப்பை பெற்றார் கண்ணதாசன்.
கிருஷ்ணன் குறித்து பாடல்களை கொண்ட அந்த ஆல்பத்தை ஆர்வத்தோடு எழுதினார் கண்ணதாசன். அதற்கு எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார். எம்.எஸ்.வியின் இசையில் அந்த பாடலை கேட்டப்போது மெய் சிலிர்த்து போனார் கண்ணதாசன்.
அதிலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்னும் அந்த ஒரு பாடலுக்கு பெரும் ரசிகர் ஆனார் கண்ணதாசன். இந்த நிலையில் எம்.எஸ் வியை அழைத்த கண்ணதாசன் இனி நீ எங்கு இசை நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் முதல் பாடலாக இதைதான் பாட வேண்டும் என கூறினார்.
அதற்கு எம்.எஸ்.வியும் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு எங்கு பாடல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் எம்.எஸ்.வி அந்த பாடலைதான் முதலில் பாடுவாராம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்