Connect with us

செத்து செத்து விளையாடலாமா!.. சினிமாவில் வந்ததை நேரில் செய்த கண்ணதாசன்!.

Cinema History

செத்து செத்து விளையாடலாமா!.. சினிமாவில் வந்ததை நேரில் செய்த கண்ணதாசன்!.

Social Media Bar

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் வரும் சிலருக்கு சில வித்தியாசமான ஆசைகளும் இருப்பதுண்டு. அப்படி கண்ணதாசனுக்கு வந்த வித்தியாசமான ஆசை ஒன்று தமிழ் சினிமா பிரபலங்களை ஆடி போக வைத்தது என்று கூறலாம்.

கண்ணதாசனுக்கு திடீரென ஒரு நாள் ஒரு விஷயம் தோன்றியது. ஒருவேளை நாம் இறந்து விட்டால் நமக்காக யாரெல்லாம் கண்ணீர் வடிப்பார்கள் முதலில் யார் ஓடி வருவார்கள் என்று ஒரு சந்தேகம் வந்தது. எனவே அவரது உதவியாளரை அழைத்து திடீரென மாரடைப்பு காரணமாக கண்ணதாசன் இறந்து விட்டார் என்று பிரபலங்களுக்கு போன் செய்து சொல் என்று கூறிவிட்டார்.

அவரது உதவியாளரும் அப்படியே செய்ய எம்.எஸ் விஸ்வநாதனில் துவங்கி அப்போது இருந்த பிரபலங்கள் அனைவரும் கண்ணதாசன் வீட்டை நோக்கி ஓடி வந்திருக்கின்றனர்.

அதிலும் எம்.எஸ் விஸ்வநாதன் கண்ணீர் விட்டு அழத்துவங்கி விட்டார் இதனை பார்த்த கண்ணதாசன் இதற்கு மேலும் சரிப்பட்டு வராது என்று வெளியில் வந்து உண்மையை சொல்லிவிட்டார். அதன் பிறகு கண்ணதாசனை கட்டி அணைத்து அழுதுள்ளார் எம்.எஸ்.வி.

இனிமேல் விளையாட்டிற்கு கூட இப்படி சொல்லாதீர்கள் என்று அவரிடம் கூறியுள்ளார் எம்.எஸ்.வி இப்படியான காட்சிகள் எல்லாம் படத்தில் தான் பார்த்திருப்போம் ஆனால் நிஜத்திலேயே அதை செய்து உள்ளார் கண்ணதாசன்.

To Top