Latest News
பெரும் பட்ஜெட்டில் தயாராகும் காந்தாரா 2.. சிறப்பான சம்பவம் இருக்கு!..
தென்னிந்தியாவை பொறுத்தவரை பெருதெய்வ வழிப்பாட்டை விட சிறு தெய்வ வழிப்பாடுதான் மக்கள் மத்தியில் முன்னிலை பெற்ற வழிப்பாடாக இருக்கிறது. மதங்களும் மத கடவுள்களும் வருவதற்கு முன்பே தங்களது நிலத்தில் வாழ்ந்த மண் சார்ந்த மனிதரை மக்கள் தெய்வமாக வணங்க துவங்கியிருந்தனர்.
எனவே சுடலைமாடன், அய்யனார், வீரனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்களும் காளியம்மன்,பேச்சியம்மன், போன்ற பல வகையான அம்மன்களும் மக்களின் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களுக்கான வழிபாடுகளும் அவர்களது மண் மற்றும் பண்பாடு சார்ந்தே இருந்ததால் பொதுவாகவே வட்டார தெய்வங்கள் மக்களுக்கு நெருக்கமான தெய்வங்களாக இருக்கின்றன.
இதனால் வட்டார தெய்வங்கள் தொடர்பாக வரும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழில் சின்னதாயி மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் வட்டார தெய்வத்தை அடிப்படையாக கொண்டு வந்துள்ளன.
அதே போல இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விட்டுவிடு கருப்பா என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு வெளிவந்த விடாது கருப்பு தொடரும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்த நிலையில் கன்னட இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி வட்டார தெய்வத்தை அடிப்படையாக கொண்டு எடுத்த திரைப்படம் காந்தாரா.
தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படம் பஞ்சுருளி என்கிற வட்டார தெய்வத்தின் கதையை அடிப்படையாக கொண்டதாகும். இந்த நிலையில் பஞ்சுருளி உருவான கதையை அடுத்த பாகமாக எடுக்க இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
பொதுவாக பஞ்சுருளி பழங்குடி இன மக்களின் தெய்வமாகவும், காட்டை காக்கும் எல்லை சாமியாகவும் காட்டப்பட்டுள்ளது, மேலும் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க கி.பி 300 முதல் 400 காலக்கட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்