என்னதான் நட்புனாலும் அந்த விஷயத்தில் கவின்…! ஷாக்கான நெல்சன்…

தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராக கவின் இருந்து வருகிறார். இதனாலேயே நடிகர் கவினுக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து அவர்களுக்கு மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும்.

நிறைய நடிகர்கள் தவறான கதை களங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக சினிமாவில் வரவேற்பை இழப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு நடிகர்கள் விமல் களவாணி திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பை பெற்றார்.

கவின் சம்பளம்:

பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காததால் மார்க்கெட்டை இழந்தார் விமல். இந்த நிலையில் தற்சமயம் கவின் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பிளடி பெக்கர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இருக்கிறார்.

kavin
kavin
Social Media Bar

நெல்சனும் கவினும் நீண்ட நாள் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் பிளடி பெக்கர் திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள் என்று கவினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நெல்சன் கூறும் பொழுது இப்பொழுது வரை கவின் படத்திற்கான சம்பளத்தை வாங்கவே இல்லை.

பட சம்பளத்தில் ஒரு 10 சதவீதம்தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி படம் ஓடுவதை வைத்துதான் நான் அவருக்கு சம்பளமே கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் நெல்சன். நட்பின் காரணமாக மற்ற நடிகர்கள் கூட செய்யாத விஷயத்தை கவின் நெல்சனுக்காக செய்திருக்கிறார் என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.