News
ராக்கி பாய்க்கு வில்லனாகும் பிரம்மாண்ட நடிகர்! – கேஜிஎஃப் 3 செம அப்டேட்!
கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் கேஜிஎஃப் சேப்டர் 2.

கடந்த 2018ல் வெளியான கேஜிஎஃப் சேப்டர் 1 இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த இரண்டாவது பாகம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
படம் வெளியாகி 25 நாட்களை கடந்து விட்ட நிலையில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து திரையரங்குகளிலும் ஓடி வருகிறது. இந்நிலையில் சூட்டோடு சூடாக கேஜிஎஃப் 3 படத்திற்கான பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைத்திருந்தார்கள்.
தற்போது மூன்றாம் பாகத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் பிரபலமான நடிகரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக நடிகர் ராணா டகுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணா ஏற்கனவே பாகுபலியில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
