தமிழில் வெகு காலங்களாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் காமெடி திரைப்படங்களாக இருந்தாலும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் சீரியஸான திரைப்படங்களாகவும் அமைந்துள்ளன.
அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிகை குஷ்புதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு நடிகை குஷ்புவையே திருமணம் செய்துக்கொண்டார் சுந்தர் சி. நடிகை குஷ்புவின் பெயரில் பிறகு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சுந்தர் சி துவங்கினார்.
அதன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார் குஷ்பு. இந்த நிலையில் அரசியலில் குஷ்புவிற்கு எதிராக எழும் சர்ச்சைகள் குறித்து சுந்தர் சி பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது தமிழ் பெண்களுக்கு கற்பு கிடையாது என குஷ்பு கூறியதாக ஒரு வீடியோ வலம் வந்தது. அது குஷ்பு கூறியதை ஒட்டி வெட்டி எடிட் செய்த வீடியோ. குஷ்பு அப்படி சொல்லவே இல்லை. எந்த தவறும் அவர் செய்யவில்லை என்பதால் நான் அவருக்கு ஆதரவாக நின்றேன்.
அந்த சமயங்களில் ஜெயலலிதா எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார். அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடும்படி கூறினார். நானும் இதுக்குறித்து குஷ்புவிடம் பேசினேன். ஆனால் அதை கேட்டு குஷ்பு கதறி அழுதார்.
செய்யாத தவறுக்காக எதற்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. மேலும் நானே மன்னிப்பு கேட்க சொன்னது அவருக்கு மன வருத்தத்தை அளித்தது. அன்று ஏன் குஷ்புவிடம் அப்படி சொன்னோம் என இப்போது வரை வருத்தப்படுகிறேன் என்கிறார் சுந்தர் சி.






