Connect with us

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இலவச ஆட்டோ சேவை!.. அரசுக்கே டஃப் கொடுக்கும் KPY பாலா…

kpy bala free auto service

News

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இலவச ஆட்டோ சேவை!.. அரசுக்கே டஃப் கொடுக்கும் KPY பாலா…

Social Media Bar

Kalakapovathu yaaru Bala: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் அறிமுகமானவர் பாலா. பொதுவாக மக்களுக்கு நன்மை செய்யும் அரசியல்வாதிகள் யாரும் தங்களது சொந்த பணத்தில் நன்மை செய்வது கிடையாது. அதற்கு அரசு கஜானாவைதான் நம்பியிருக்கின்றனர்.

பிரபலங்கள் சிலர்தான் மக்களுக்கு நன்மைகளை செய்து தருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து உதவுகின்றனர். 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒரு லட்ச ரூபாய்க்கு நன்மைகள் செய்வது வழக்கமான விஷயம்தான்.

ஆனால் பாலாவை பொறுத்தவரை தன்னிடம் உள்ள சொத்துக்களை மக்களுக்கு நன்மைகள் செய்யவே பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

அதே போல ஒரு கிராமத்தில் தூய்மையான குடிநீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து கொடுத்தார். இன்னும் எண்ணிலடங்கா உதவிகளை பாலா செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனை செல்ல பேருந்துகளில் செல்வதற்கு கஷ்டப்படும் நோயாளிகளை பார்த்த பாலா அதற்காக இலவச ஆட்டோ சேவையை துவங்கியுள்ளார். இதில் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கும் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் உதவி பெற முடியும்.

தற்சமயம் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்படும் இந்த ஆட்டோவை தினசரி 24 மணிநேரமும் இயக்க திட்டமிட்டுள்ளார் பாலா. தொடர்ந்து இப்படி நன்மை செய்வதால் பாலா பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி வரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

எவ்வளவோ நன்மைகள் செய்த விஜயகாந்தையே விமர்சித்த மக்கள் பாலாவையும் அப்படி பேசிவிடுவார்களோ என பயமாக இருக்கிறது என கூறுகின்றனர் பாலாவின் ரசிகர்கள்.

To Top