நாங்களும் அனிமேஷன் போட்டோ விடுவோம் –  க்ரீத்தி ஷெட்டி

கோலிவுட் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபல கதாநாயகிகள் எல்லாம் உண்டு. ஆனால் ஒரே ஒரு பாட்டின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை க்ருத்தி ஷெட்டி.

Social Media Bar

மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. 2021 ஆம் ஆண்டு வந்த உப்பனா என்ற திரைப்படம் மிகவும் பிரபலமானது இதையடுத்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதையடுத்து தெலுங்கில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு கதாநாயகனாக நடித்தார். அந்த படத்திலும் கூட இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு த வாரியர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் வந்த புல்லட் பாடல் இவரது மார்க்கெட்டை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழிலும் கூட தற்சமயம் வணங்கான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தற்சமயம் சில ஏ.ஐ அனிமேஷன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.