காந்த கண்ணழகி! – க்ரீத்தி ஷெட்டியின் டீசண்ட் லுக்!

பொதுவாக கதாநாயகிகள் பெரும் கதாநாயகர்கள் அல்லது பெரும் வெற்றி கொடுத்த படங்கள் இவற்றின் மூலம்தான் பிரபலமாவார்கள். ஒருவேளை அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ப்ளாப் அடித்தால் அவர்களால் வெகு நாட்களுக்கு சினிமாவில் இருக்க முடியாது.

ஆனால் ஒரு பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான கதாநாயகி ஒருவர் இருக்கிறார். அவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. உப்பன்னா என்கிற மலையாள படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

2019 இல் வந்த இந்த படத்திலும் கூட ஒரு பாடல் மூலமாகதான் ஹிட் ஆனால் க்ரீத்தி ஷெட்டி. அதன் பிறகு வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானிக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழிலும் வந்ததால் சிலருக்கு தமிழில் க்ரீத்தி ஷெட்டியை தெரிய துவங்கியது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த வாரியர் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படம் எனலாம்.

அதில் வெளியான புல்லட் என்கிற பாடல் இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து தமிழிலும் ட்ரெண்ட் ஆனார் க்ரீத்தி ஷெட்டி. தற்சமயம் அசத்தலான சில க்யூட் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

Refresh