படம் முடியுற வரைக்கும் கல்யாணம் செஞ்சுக்க கூடாது? – நயன்தாராவுக்கு ரூல்ஸ் போட்ட தயாரிப்பாளர்!

கதாநாயகனாக இருந்தாலும், கதாநாயகியாக இருந்தாலும் படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது சில நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் விதிப்பது வழக்கம்.

படம் முடிகிற வரை எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்கான பாதுக்காப்பு நடவடிக்கைக்காகவே இந்த உடன்படிக்கை.

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கே.எஸ் ஸ்ரீனிவாசன் தயாரித்தார்.

அப்போது அவர் கதாநாயகியான நயன்தாராவுடன் உடன்படிக்கை போடும்போது அதில் படம் முடியும் வரை நயன்தாரா யாரையும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்பதை விதிமுறையாக சேர்ந்திருந்தார்.

ஏன் இவ்வாறு இவர் சேர்த்துள்ளார் என பார்க்கும்போது அப்போது நயன் தாரா பற்றி நிறைய காதல் கதைகள் வதந்திகளாக வந்துக்கொண்டிருந்த சமயம். எனவே படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போதே அவர் யாரையாவது திருமணம் செய்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் விட்டுவிட்டால் அது பெரும் பிரச்சனையாகிவிடும் என யோசித்திருக்கிறார் தயாரிப்பாளர்.

எனவே அதை ஒரு நிபந்தனையாகவே அக்ரிமெண்டில் எழுதி நயன் தாராவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார் ஸ்ரீனிவாசன்.

Refresh