Tamil Cinema News
இயக்குனர்கள் பத்தி அப்படி சொன்னீங்களே.. நான் கூடதான் படம் பண்ணுனேன்.. சிம்புவை லாக் செய்த கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமாவில் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி அதிக வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.
ஒரு காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்களே காத்திருந்தனர் என்று கூறலாம். இப்பொழுது கே எஸ் ரவிக்குமாருக்கு படம் இயக்குவதில் பெரிதாக ஆர்வமில்லை.
எனவே திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை வைத்து பேட்டி ஒன்றை எடுத்திருந்தார் கே.எஸ் ரவிக்குமார் தக்லைஃப் திரைப்படத்திற்காக நடந்த அந்த பேட்டியில் சிம்புவிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்ட பொழுது இயக்குனர்கள் தாமதமாக வருவதால் நானும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறேன்.
இயக்குனர் சீக்கிரம் வந்து விட்டால் நானும் படப்பிடிப்பது சீக்கிரம் வருவேன் என்று கூறினீர்கள். சரவணா திரைப்படத்தை நான் உங்களை வைத்து தான் இயக்குனேன். அப்பொழுது படப்பிடிப்புக்கு நீங்கள் சரியாக தான் வந்தீர்கள் என்று சிம்புவிடம் கேட்டார் கே.எஸ் ரவிக்குமார்.
அதற்கு பதில் அளித்த சிம்பு நீங்கள் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விட்டதால் நானும் வந்தேன் என்று கூறினார். இது குறித்து விளக்கிய கே எஸ் ரவிக்குமார் கூறும் பொழுது முதல் இரண்டு நாட்கள் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக தான் வந்தார்.
ஆனால் பிறகு அவர் உதவி இயக்குனரிடம் கேட்ட பொழுது நீங்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றாலும் கூட கேஸ் ரவிக்குமார் வந்து மற்ற காட்சிகளை படமாக்க துவங்கி விடுவார் என்று கூறி இருக்கின்றனர். அதைக் கேட்ட பிறகுதான் சிம்பு ஒழுங்காக பட் பிடிப்புக்கு வந்தார்.
30 நாட்களில் சரவணா திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையுமே முடித்துவிட்டோம் என்று கூறி இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
