Movie Reviews
ஏற்கனவே ஊத்துன தோசைதான்!.. லால் சலாம் எப்படி இருக்கு!.. பட விமர்சனம்!.
Lal Salaam Movie Review: ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். மதநல்லிணக்கத்தை முக்கிய கருத்தாக வைத்து இந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் முதலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்த ரஜினி பிறகு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
படத்தின் கதை:
படத்தின் கதைப்படி அனைத்து மதத்தினரும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடுபவர்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.
ஆனால் கிரிக்கெட் மூலமாக அந்த ஊருக்குள் சில பாகுபாடுகள் உருவாக துவங்குகின்றன. பிறகு அது வன்முறையில் முடிந்து அதனால் இரு ஊராருக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட துவங்குகின்றன. இந்த பிரச்சனையின் காரணமாக ஜெயிலுக்கு சென்று வரும் விஷ்ணு விஷால் திரும்ப ஊருக்கு வரும்பொழுது ஊரில் தேர் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் உருவாகின்றன.
ஆனால் அந்த தேர் திருவிழாவிலும் பிரச்சனைகள் உருவாகிறது இப்படியே அந்த பாகுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அது ஒரு கலவரத்தில் போய் முடிகிறது. சாதாரணமாக ஒரு நாட்டில் கலவரம் எப்படி உருவாகிறது என்பதன் ஒரு விளக்கமாகத்தான் திரைப்படத்தில் அந்த பகுதியை பார்க்க முடிகிறது.
இதற்கு நடுவே விக்ராந்தின் தந்தையாக ரஜினிகாந்த திரைப்படத்தில் வருகிறார். ரஜினிகாந்த் அதே ஊரை சேர்ந்தவர்தான் அதற்கு முன்பு மும்பையில் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தவர் ரஜினிகாந்த். மத நல்லிணக்கத்திற்காக குரல் கொடுப்பவராக இருக்கும் ரஜினிகாந்த் இந்த கலவரத்திற்கு பின்னால் இருக்கும் அரசியலை அறிந்து கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறார்.
இதற்கு நடுவே விக்ராந்தும் விஷ்ணு விஷாலும் செய்யும் விஷயங்களையும் கொண்டு படத்தின் கதை நகர்கிறது.
படத்தை பொறுத்தவரை படம் முழுக்க ஏ.ஆர் ரகுமானின் இசை பட்டையை கிளப்பி இருக்கிறது. ஆனால் திரைக்கதை அருமையாக இருந்தாலும் கூட இதுவரை பேசாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த திரைப்படத்தில் புதிதாக பேசிவிடவில்லை.
இதுவரை மத நல்லிணக்கம் குறித்து திரைப்படங்களில் என்னவெல்லாம் பேசப்பட்டுள்ளதோ அதையேதான் திரும்பவும் இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு கிரிக்கெட்டை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி இருப்பது தான் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்ததால் இரண்டு படமும் ஒன்று போல் இருப்பதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்