News
விஜய் மட்டும் இல்ல.. மன்சூர் அலிக்கான், கெளதம் மேனன் ரெண்டு பேருமே எல்.சி.யுல வராங்க… லீக் செய்த லோகேஷ்!
Leo mansoor alikhand and gautham menon, : லியோ திரைப்படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு விதமான பேச்சுக்கள் உருவாகி உள்ளன. தொடர்ந்து அடுத்து வரும் திரைப்படங்கள் லியோவைவிட அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தில் உள்ள பிளாஷ்பேக் காட்சி தொடர்பாக ஒரு புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதாவது அந்த திரைப்படத்தில் வரும் ஃபிளாஷ்பாக் காட்சியானது மன்சூர் அலிகான் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது தவிர அதுதான் உண்மையான பிளாஷ்பேக் என்று சொல்ல முடியாது.

ஏனெனில் அந்த கதையை விஜய் கூறவில்லை என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ். எனவே விஜயின் பார்வையில் இருந்து அவரின் முன் கதை மொத்தமாக மாறும் என்று கூறப்படுகிறது. எனவே மொத்த கதையுமே லியோவின் இரண்டாம் பாகத்தில் மாற்றத்தை காணலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவர் பேசும் பொழுது கௌதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் தொடர்ந்து வருவார் என்று கூறியிருக்கிறார். மேலும் மன்சூர் அலிக்கானுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதா இல்லையா என்று நாங்கள் படத்தில் காட்டவில்லை.
எனவே அதிலுமே மாற்றங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார் எனவே லோகேஷ் கனகராஜ் யுனிவர்சின் கடைசி படமான விக்ரம் 2 திரைப்படம் வரையிலுமே இவர்கள் இருவரும் வருவார்கள் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.
