சந்திரமுகி 2 வின் 6 மணி ஷோவில் விஜய் வரார்!.. என்னப்பா சொல்றிங்க!.

2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா பிரபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெகு நாட்களாக அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார் இயக்குனர் பி வாசு, ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தை எடுக்க முடியாமலே இருந்தார் இயக்குனர்.

பிறகு ரஜினி வேண்டாம் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என நடிகர் லாரன்சை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்தார் பி வாசு. சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இன்று திரையில் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இன்றுதான் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாக இருக்கிறது.

Social Media Bar

இன்று ஆறரை மணி அளவில் லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் இன்டர்வெல் சீனில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்று 6:30 மணிக்கு மேல் உள்ள அனைத்து ஷோக்களிலும் லியோ திரைப்படத்தின் பாடலை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.