Connect with us

உங்க மதம் போரடிச்சி போச்சு!.. லிவிங்ஸ்டன் பேச்சால் கடுப்பான கிருஸ்துவர்கள்!..

actor livingston

News

உங்க மதம் போரடிச்சி போச்சு!.. லிவிங்ஸ்டன் பேச்சால் கடுப்பான கிருஸ்துவர்கள்!..

Social Media Bar

Tamil Actor Livingstone :  தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். பொதுவாக அவரை ஒரு காமெடி நடிகராக தான் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும்.

ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு இயக்குனர் ஆவார். மேலும் திரைக்கதை ஆசிரியராகவும் பல படங்களில் பணிபுரித்து இருக்கிறார்கள். லிவிங்ஸ்டண் ஆரம்பத்தில் முதன்முதலாக இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

லிவிங்ஸ்டன் அப்போதைய காலகட்டங்களில் பாக்யராஜிடம் இருந்து திரைக்கதை எழுதுவது தொடர்பாகவும் படம் இயக்குவது தொடர்பாகவும் பல விஷயங்களை கற்றுக் கொண்டார். இந்த நிலையில் முந்தானை முடிச்சு திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் லிவிங்ஸ்டன்னுக்கும் பாக்யராஜுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாக்கியராஜை விட்டு பிரிந்தார்கள்.

அதன் பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களுக்கு திரை கதைகளை எழுதி கொடுத்து வந்த லிவிங்ஸ்டன் கமல்ஹாசன் போன்ற பெரும் நடிகர்களின் படங்களுக்கு கூட கதையை எழுதி கொடுத்துள்ளார். பிறகு இயக்குனராகவும் சில படங்களில் பணிபுரிந்து விட்டு இறுதியாக நடிகரானார் லிவிங்ஸ்டண்.

நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றிருக்கிறார் லிவிங்ஸ்டண் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் இடையில் பேட்டியில் பேசும்பொழுது கிறிஸ்தவ மதம் எனக்கு மிகவும் போர் அடித்துவிட்டது எனவே கிறிஸ்தவ மதத்திலிருந்து நான் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன்.

மேலும் கிருஷ்ணன் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. எனவேதான் நான் தற்சமயம் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதை கிறிஸ்துவ மக்கள் விமர்சித்து வருகின்றனர் எப்படி ஒரு மதம் உங்களுக்கு போர் அடித்து விடும் கடவுள் மீது நீங்கள் நிஜமாகவே நம்பிக்கையோடு இருந்தீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்ப இது ஒரு சர்ச்சையான விஷயமாக மாறி உள்ளது.

To Top