ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Lokesh kanagaraj: சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் படமான மாநகரம் திரைப்படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் இன்னமும் பெரும் வெற்றியை கொடுத்தது.

பிறகு தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்றார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. அடுத்து விக்ரம் லியோ என வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த பிறகு அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

lokesh-kanagaraj
lokesh-kanagaraj
Social Media Bar

இந்த திரைப்படத்திற்கான வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை அணிந்திருப்பது தொடர்பாக பல கதைகள் வலம் வந்துக்கொண்டுள்ளன. முக்கியமாக அவர் இவ்வளவு பெரிய உச்சத்தை அடைய இந்த கருங்காலி மாலைதான் காரணம் என பேச்சுக்கள் இருக்கின்றன.

லோகேஷ் கனகராஜின் கருங்காலி மாலை:

அதே போல சினிமாவிற்குள் வந்த ஆரம்பக்கட்டத்தில் லோகேஷ் கனகராஜ் இந்த கருங்காலி மாலையை அணிந்திருக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் உண்மையில் இது என்ன மாலை என்பது கூட எனக்கு தெரியாது.

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

ஒருமுறை படப்பிடிப்புக்காக நாங்கள் சென்றுக்கொண்டிருந்தப்போது நான் சென்றுக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த நிலையில் என்னுடன் பணிப்புரியும் சதிஷ் என்னும் ஆர்ட் ட்ரைக்டர் இந்த மாலையை எனக்கு போட்டுவிட்டார்.

என்மீது அவர் அதிக அன்பு கொண்டவர். எனவே அவரது பரிசாகதான் இந்த மாலையை போட்டுள்ளேனே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.