Connect with us

லோகேஷ் கனகராஜ் படத்தில் வாய்ப்பு தருவதாக மோசடி! – பிரபல நடிகர் குற்றச்சாட்டு!

Lokesh Kanagaraj

News

லோகேஷ் கனகராஜ் படத்தில் வாய்ப்பு தருவதாக மோசடி! – பிரபல நடிகர் குற்றச்சாட்டு!

Social Media Bar

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுவதும் பிரபலமாகி உள்ளவர் தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவரை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்கள் பிடித்துக் கொள்ள மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து அதிரடியான படங்களை களமிறக்கி வருகிறார் லோக்கி.

லோகேஷின் படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்து வருகிறது. லோகேஷின் படத்தில் சின்ன கதாப்பாத்திரம் கூட அழுத்தமான கதாப்பாத்திரமாக உள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜின் படத்தில் சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆசையை பயன்படுத்தி ஒரு மர்ம கும்பல் பலரிடம் பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து குற்றம் சாட்டியுள்ள பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மேனேஜர் என்று சொல்லி ஒரு நபர் இளம் நடிகர், நடிகைகளை தொடர்பு கொள்வதாகவும், லோகேஷின் அடுத்தப்படத்தில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும், பணம் அனுப்பினால் ஆடிஷனுக்கு ஆடை வாங்கி தருவதாகவும் கூறி பண மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார்.

சினிமாத்துறைக்கு வர விரும்புபவர்கள் இதுபோன்ற ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

To Top