Connect with us

சூர்யாவிற்கு பதில் அமீர்கான். அடுத்த படத்தில் லோகேஷ் எடுத்த முடிவு..!

Tamil Cinema News

சூர்யாவிற்கு பதில் அமீர்கான். அடுத்த படத்தில் லோகேஷ் எடுத்த முடிவு..!

Social Media Bar

தமிழில் தோல்வி முகமே காணாத இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். சாதாரணமாக பல வருடங்கள் போராடி ஒரு இயக்குனர் பிடிக்கும் இடத்தை ஒரு சில படங்களை இயக்கியதன் மூலமே பிடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனால் நடிகர்கள் படம் என்பதையும் தாண்டி லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே நன்றாக இருக்கும் என்கிற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. அதே சமயம் தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்களும் கூட இப்போது லோகேஷ் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கூலி திரைப்படத்திற்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி 2 மற்றும் சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க இருக்கிறார் லோகேஷ்.

Irumbukai Mayavi

இந்த நிலையில் நடிகர் அமீர்கான் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். அதுக்குறித்த பேச்சுவார்த்தைகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சூர்யாவை கதாநாயகனாக வைத்து இரும்பு கை மாயாவி என்கிற படத்தை உருவாக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். தற்சமயம் அந்த கதையைதான் அமீர்கானை வைத்து இயக்க இருக்கிறாராம் லோகேஷ்.

இந்த இரும்பு கை மாயாவி கதாபாத்திரம் கூட எல்.சி.யுவில் வரலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

Bigg Boss Update

To Top