News
ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ பார்க்கணும்னு அவசியம் இல்ல!.. ரசிகர்களுக்கு லோகேஷ் அறிவுரை!..
தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் பெறும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது லியோ. இந்த நிலையில் பல திரையரங்குகளில் முன்பதிவு துவங்கியப்போதே அனைத்து காட்சிகளும் புக் ஆகி விட்டன.
இன்னும் சில திரையரங்குகளில் புக்கிங் ஓப்பன் ஆன உடனேயே டிக்கெட் அனைத்தும் தீர்ந்து விட்டன. இதனால் திரையரங்குகளே ப்ளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கின்றனவா என்கிற கேள்வி பொது மக்களுக்கு வந்துள்ளது.
ஆனால் ப்ளாக்கில் வாங்கியாவது தளபதி படத்தை பார்க்க வேண்டும் என ஆவலாக இருக்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் அவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக லோகேஷ் கனகராஜ் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.
வேலை பார்த்துவிட்டு மீதம் இருக்கும் நேரத்திற்கு பொழுது போக்குவதற்காகதான் சினிமா. அதற்கு போய் நிறைய காசை செலவு செய்யாதீர்கள். லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக இருந்து கிடைக்கும்போது எடுத்து பாருங்கள் என கூறியுள்ளார் லோகேஷ்.
நியாயமாக திரையரங்குகளைதானே ப்ளாக்கில் டிக்கெட் விற்காதீர்கள் என லோகேஷ் கூற வேண்டும். ஏன் மக்களிடம் அறிவுறுத்துகிறார் என அதற்கும் ஒரு குழு கேள்வி எழுப்பி வருகிறது.
