News
லியோல பண்ணுனதை அடுத்த படத்தில் பண்ண மாட்டேன்!.. தயாரிப்பாளர் தொல்லை தாங்காமல் லோகேஷ் எடுத்த முடிவு!..
தற்சமயம் திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்து வருகிறது விஜய் நடித்த லியோ திரைப்படம். ஜனவரி மாதம் தான் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
ஜனவரி மாதம் படபிடிப்பு துவங்கும்போதேஅக்டோபர் 19 இல் இந்த படம் வெளியாகும் என்று ரிலீஸ் தேதியை வெளியிட்டிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆனால் படத்தில் செய்ய வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக இருந்தன.
காஷ்மீரில் மட்டும் ஒரு மாதம் படப்பிடிப்பு சென்றது. அங்கே இருந்து வந்து பெரிதாக ஓய்வு கூட எடுக்க முடியாத நிலை லோகேஷுக்கு இருந்தது. மேற்கொண்டு தயாரிப்பாளரும் லோகேஷை அதிகமாக வேலை வாங்கி உள்ளார்.
அதை தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த அளவுக்கு கஷ்டப்பட்டுதான் அக்டோபருக்குள் படத்தை எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். எனவே இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது இனி லியோ படத்தில் செய்த தவறை எந்த படத்திலும் செய்ய மாட்டேன்.
படத்தின் ரிலீஸ் தேதியை படப்பிடிப்பு துவங்கும் வரை இனி கூற மாட்டேன் என்று கூறியுள்ளார். பொதுவாக பழைய திரைப்படங்களில் படப்பிடிப்பு துவங்கும் பொழுது படம் எப்போது வெளியாகும் என்கிற தேதியையும் வெளியிட்டு விடுவார்கள்.
ஆனால் அப்பொழுதெல்லாம் மிகவும் எளிதாகவே படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அந்த முறையை லோகேஷ் கனகராஜ் பின்பற்றி இருந்தாலும் இப்போது இருக்கும் கிராபிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எவ்வளவு காலங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதை அறியாமல் வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியாது! அதுதான் லோகேஷ் கனகராஜ்க்கு பிரச்சனையாகியுள்ளது!.
