படக்குழுவே ஆடிப்போயிட்டோம்.. ரஜினிக்கு உடல் முடியாமல்  போக காரணம்? உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் ரஜினிகாந்த்திற்கு என்று எப்பொழுதுமே தனியாக ஒரு இடம் இருக்கும். சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் ரஜினிக்கு அவ்வளவு சாதாரணமாக வந்துவிடவில்லை.

அதற்காக மிகவும் அவர் உழைத்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வருகிற பத்தாம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில் நடந்தது இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் வெகு நேரங்கள் அதில் பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினிகாந்த் தான் முக்கியம்:

rajini

Social Media Bar

இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து பேசிய ரசிகர்கள் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது ரஜினிகாந்த்க்கு அதிக கடின சண்டை காட்சிகளை வைத்ததாகவும் அதனால் தான் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் அதற்கு பதில் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது 40 நாட்களுக்கு முன்பே இந்த சிகிச்சை குறித்து ரஜினி சார் எங்களிடம் கூறிவிட்டார். அதற்காக நாங்கள் சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து அவரை அனுப்பி வைத்து விட்டோம்.

ஆனால் எங்களை குறித்து வதந்திகளை பரப்பியதை பார்த்த பொழுது எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது சூப்பர் ஸ்டாரை விட படம் ஒன்றும் எங்களுக்கு முக்கியம் கிடையாது என்று பதிலளித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.