Connect with us

இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன்!.. வலம் வரும் வேற லெவல் போட்டோக்கள்!..

malavika-mohanan

Actress

இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன்!.. வலம் வரும் வேற லெவல் போட்டோக்கள்!..

Social Media Bar

Actress Malavika mohanan: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமான நடிகைகளில் மாளவிகா மோகனன் முக்கியமானவர். இவருக்கு தமிழில் முதல் படமே நடிகர் ரஜினியுடன் அமைந்தது. பேட்ட திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு வெகுவாக விமர்சனத்துக்குள்ளானார். மாஸ்டர் திரைப்படத்தில் அவரது நடிப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என கூறப்பட்டது.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமாகி வந்தார் மாளவிகா மோகனன். அதன் பிறகு தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தற்சமயம் அவர் நடித்த கிரிஸ்டி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களை விடவும் மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு பிரபலமானவர். முன்பு லோ ஆங்கிளில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளம் முழுவதும் பிரபலமானது.

தற்சமயம் அதே மாதிரியான இன்னொரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top