Connect with us

Manujummel Boys Review: விஸ்வரூபம் எடுக்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்!.. அப்படி என்னதான் கதை இருக்கு இதுல!..

Manjummel Boys Tamil reiview

Movie Reviews

Manujummel Boys Review: விஸ்வரூபம் எடுக்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்!.. அப்படி என்னதான் கதை இருக்கு இதுல!..

Social Media Bar

Manjummel Boys Tamil reiview: சமீப காலமாகவே மலையாள திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாவிலும் நல்ல கதைக்கரு கொண்ட திரைப்படங்கள் எல்லாம் வந்துக்கொண்டுதான் இருந்தன. ஆனால் தற்சமயம் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாக்கள் போல ஒரே சண்டை படங்களாகதான் வருகின்றன.

இந்த நிலையில் தமிழில் மாறுப்பட்ட திரைப்படங்களை விரும்பும் ரசிகர்கள் தற்சமயம் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்சமயம் வெளியாகி சில வாரங்களாக சமூக வலைத்தளத்தையே மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம். குறைந்த பட்ஜெட்டில் கூட நல்ல படங்களை எடுக்க முடியும் என மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றனர் மலையாள இயக்குனர்கள்.

மஞ்சுமல் பாய்ஸ் கதை:

மஞ்சுமல் பாய்ஸ் என்பது 11 நபர்களை கொண்ட ஒரு குழு ஆகும். இந்த குழுவில் உள்ள 11 நண்பர்களுக்கும் ஒவ்வொரு வகையான குடும்ப பிண்ணனி உண்டு. இந்த மாதிரியான நண்பர்கள் குழு என்றாலே அவர்களுக்கு பொதுவாக ஒரு ஆசை இருக்கும்.

ஒரு முறையாவது கோவாவிற்கு அனைவரும் சேர்ந்து பயணப்பட வேண்டும் என்பதுதான் அது. ஆனால் கோவாவிற்கு செல்லும் அளவிற்கு பண வசதி இல்லாத காரணத்தினால் கொடைக்கானலுக்காவது போக வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

அதன்படி கேரளத்தின் கொச்சியில் இருந்து கிளம்பும் இந்த குழு கொடைக்கானல் வந்து அங்கிருக்கும் இயற்கை எழில் பொங்கும் விஷயங்களை பார்த்து வருகின்றனர். கொடைக்கானலில் பிரபலமான இடங்களில் குணா படத்தில் வரும் குகையும் முக்கியமான பகுதியாகும்.

எனவே அதை பார்க்க நண்பர்கள் குழு செல்கின்றனர். அங்கு சென்று குணா குகையை பார்த்துவிட்டு வனத்துறை அனுமதித்த இடத்தையும் தாண்டி காட்டிற்குள் செல்கின்றனர். அப்போது அவர்கள் குழுவில் உள்ள சுபாஷ் என்னும் நபர் எதிர்பாராத விதமாக பாறை இடுக்கில் தவறி விழுந்துவிடுகிறார்.

அது 900 அடி பள்ளம். இந்த நிலையில் அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் அவரை காப்பாற்ற மேற்கொள்ளும் சாகசங்களே படத்தின் கதை. இந்த கதை நிஜமாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

To Top