ஒரு மனிதனா இருக்கவே தகுதி இல்லாதவர்!.. பிரதமரை விமர்சித்து பேசிய மன்சூர் அலிக்கான்!.

தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலமாகவே வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிக்கான். துவக்கத்தில் மன்சூர் அலிக்கான் கொடூரமான வில்லனாக நடித்து வந்தார். கேப்டன் பிரபாகரன் மாதிரியான திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன.

அதற்கு பிறகு மார்க்கெட் இழந்த மன்சூர் அலிக்கான் தற்சமயம் காமெடியனாக நடித்து வருகிறார். அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் மன்சூர் அலிக்கான். இந்த நிலையில் தற்சமயம் காங்கிரஸிற்கு ஆதரவாக பேசி வரும் மன்சூர் அலிக்கான் இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

mansoor-alikhan
mansoor-alikhan
Social Media Bar

அதில் அவர் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு விஷ பாம்பை விட மோசமாக நடந்துக்கொள்ள கூடியவர். மணிப்பூர், குஜராத் போன்ற மாநிலங்களில் அவர் கலவரத்தை உண்டாக்கினார். மன்மோகன் சிங்கின் கால் தூசுக்கு வரமாட்டார் அவர்.

அவ்வளவு பெரிய பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் கூறியவற்றை திரித்து தேர்தலுக்காக மாற்றி பேசுகிறார் மோடி. தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் மன்சூர் அலிக்கான்.