தலைவன் ரிட்டன்ஸ்.. குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்! – ட்ரெண்டாகும் “காத்தம்மா” பாடல்!

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். பின்னர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்த மன்சூர் அலிகான், சொந்தமாக சில படங்களையும் தயாரித்து, இயக்கி, நடித்தும் உள்ளார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலுக்கு பிறகு மன்சூர் அலிகானும், அந்த பாடலும் மக்களிடையே பெரும் ட்ரெண்டாகியுள்ளது.

இந்த சமயத்தில்தான் ஒரு குத்து பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார் மன்சூர் அலிகான். மோஜன் ஜீ இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பகாசுரன்’. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து முன்பே ’என் அப்பன் அல்லவா’ என்ற முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிளான ‘காத்தம்மா’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில்தான் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார் மன்சூர் அலிகான். இந்த பாடல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது

Refresh