என் பிள்ளையேல பாக்கணும்.. கேமராவிடம் கலங்கிய ஜி.பி.முத்து! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜி.பி.முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டுமென கேமராவிடம் கண் கலங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பலரும் சினிமா, சின்னத்திரையை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் சாமானிய மனிதனான ஜி.பி.முத்துவின் பங்கேற்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவுக்கு கேம் விளையாட தெரியாது முதல் ஆளாக எலிமினேட் ஆகி விடுவார் என ஆடியன்ஸ் இடையே பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக எல்லாருடனும் வாஞ்சை இல்லாமல் பழகி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ஜி.பி.முத்து.

நேற்று நடந்த கடிகார போட்டியில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்று வென்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராகவும் ஆகிவிட்டார் ஜி.பி.முத்து. இருந்தாலும் தன் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட ஜி.பி.முத்துவுக்கு அவர்கள் நியாபகம் அடிக்கடி வந்து செல்கிறது.

இதனால் எல்லாரும் தூங்கியபின் கேமரா முன் வந்த ஜி.பி.முத்து தன் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் நல்லபடியாக சாப்பிட்டு, நல்லா இருக்க வேண்டும் என்றும், ’என்னால உங்கள விட்டு இருக்க முடியல.. என்னால முடியலைனா நான் கிளம்பி வந்துடுறேன்’ என பேசுவது பார்ப்போர் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவை ஜி.பி.முத்து ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Refresh