Connect with us

படிச்சவன் கைல கத்தி கொடுக்கிறதுதான் சமூக நீதியா!.. மாரி செல்வராஜை லாக் செய்த இளைஞன்!.

mari selvaraj

News

படிச்சவன் கைல கத்தி கொடுக்கிறதுதான் சமூக நீதியா!.. மாரி செல்வராஜை லாக் செய்த இளைஞன்!.

Social Media Bar

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜின் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகம் சார்ந்து முக்கியமான விஷயத்தை பேசும் விதமாக இருக்கும்.

சமீபத்தில் இவர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையன் சார்பாக நடத்தும் ரோஸி திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார். பா.ரஞ்சித் இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாரி செல்வராஜ் அவரது மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டார்.

மேலும் அவரது திரைப்படங்கள் குறித்த விளக்கத்தையும் கொடுத்தார். அதில் அவர் பேசும்போது என்னுடைய சிறுவயதில் நான் பட்ட கஷ்டங்களைதான் நான் படமாக்கியுள்ளேன். எனக்கு சிறு வயதாக இருந்தப்போது என்னை நாற்காலியில் அமர வைத்துவிட்டு என் தந்தை நின்றுக்கொண்டே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இது எனக்கு நெருடலாக இருந்தது. எனவே ஏன் அங்கு உட்காரவில்லை என என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் உட்கார மாட்டோம் என சிம்பிளாக கூறிவிட்டார். அந்த பாதிப்பின் வெளிப்பாடுதான் மாமன்னன். ஒரு சமூகத்தின் வலியை வெளிப்படுத்தும் விதமாகவே என்னுடைய படைப்புகள் இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

இளைஞனின் கேள்வி:

அப்போது அங்கு அமர்ந்திருந்த இளைஞன் ஒருவர் மாரி செல்வராஜிடம் உங்கள் திரைப்படமான பரியேறும் பெருமாளில் கதாநாயகன் எதற்காக போராட வேண்டும், எந்தளவு போராட வேண்டும் என பேசியிருந்தீர்கள். அதே போல மாமன்னன் திரைப்படத்தில் ஒடுக்கப்படும் ஒருவர் அரசியல் ரீதியாக அதை எப்படி பெறுவது என பேசியிருந்தீர்கள்.

ஆனால் கர்ணன் படத்தை பொறுத்தவரை அந்த கிராமத்தில் படித்த இளைஞர் அவரை ஏன் வன்முறையாக காட்டினீர்கள். இதற்கெல்லாம் வன்முறைதான் தீர்வு என்பது போல அந்த படம் இருந்ததே என கேட்டார்.

மாரி செல்வராஜ் கொடுத்த விளக்கம்:

அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் கூறும்போது இந்த படத்தின் ஆர்டரை நீங்கள் மாற்றி பார்க்க வேண்டும். முதலில் கர்ணன் பாருங்கள், பிறகு பரியேறும் பெருமாள், பிறகுதான் மாமன்னன். அடுத்து வரும் வாழை திரைப்படத்தை இதற்கெல்லாம் முன்பு முதல் படமாக பாருங்கள்.

பேருந்து கூட நிற்காத ஊரில் ஒருவன் பேருந்துக்காக போராடுகிறான். பிறகு அங்கிருந்து ஒருவன் வந்து சட்டம் படிக்கிறான். பிறகு அரசியலில் சாதிக்கிறான் இப்படிதான் அதை நீங்கள் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

To Top