தமிழ் சினிமாவில் இப்பொழுது இருக்கும் முற்போக்கு இயக்குனர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
பா.ரஞ்சித்தை விடவும் பிரபலமான இயக்குனராக இப்போது மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.
ஆனால் மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி படங்களாக இருந்து வருகின்றன. இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பைசன் படமாக இருந்தாலும் சரி அதற்கு முன்பு வெளியான வாழை படமும் சரி.

மாரி செல்வராஜ் கருத்து:
வாழை திரைப்படம் அதிக கவனத்தை ஈர்க்கும் ஒரு திரைப்படமாக அமைந்து இருந்தது. இந்த நிலையில் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் குறித்த விவாதங்கள் என்பது அதிகமாக சமூக வலைதளங்களில் இருந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து பதில் அளித்த மாரி செல்வராஜ் கூறும்பொழுது விவாதம் என்பது ஒரு சமூகத்திற்கு தேவை. அதில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தலாம் தவறான கருத்துக்கள் இருக்கலாம்.
ஆனால் எப்படி இருந்தாலும் விவாதம் என்பது நமது சமூகத்தில் தேவைதான். அவர்கள் என்னை பற்றி செய்யும் விவாதங்களை எப்படி எனக்கானதாக மாற்றி கொள்ள முடியும் என்றுதான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
 
			 
			





