Tamil Cinema News
காதல் செய்தியால் வந்த பிரச்சனை நடிகை எடுத்த திடீர் முடிவு.. விஷாலால் வந்த வினை.!
லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.
அதற்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த மதகஜ ராஜா திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே அந்த படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கும் விஷாலுக்கும் காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த சர்ச்சை ஓயாமலே இருந்த காரணத்தினால் இதற்கு முடிவு கட்டும் வகையில் அபிநயா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 12 வருடங்களாக ஒரு நபரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார் நடிகை அபிநயா. மேலும் அந்த நபருடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இருந்தாலும் யார் தன்னுடைய காதலர் என்பதை அபிநயா பகிரங்கமாக வெளியிடவில்லை. இரண்டு கைகள் இணைந்து இருக்கும் புகைப்படத்தை மட்டுமே அவர் வெளியிட்டுள்ளார். அபிநயா முன்பு ஒரு பேட்டியில் பேசும்போது இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிப்பதாக இல்லை என கூறியிருந்தார்.
ஆனால் தற்சமயம் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடுள்ளார். விஷால் குறித்த சர்ச்சைக்கு முடிவு கட்டவே இப்படியான முடிவை அவர் எடுத்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.
