Connect with us

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

maya kamalhaasan

Bigg Boss Tamil

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

Social Media Bar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வெற்றிகரமாக முதல்வாரம் நிறைவடைந்துள்ளது.

முதல் வார நிறைவை அடுத்து தொகுப்பாளரான கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பவா செல்லதுரை கூறிய கதையை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டது குறித்து அவர் விளக்கம் அளித்தார். மேலும் ஜோவிகா – விசித்திரா இடையே நடந்த கல்வி குறித்த மோதல் குறித்தும் அவர் பேசினார்.

இந்நிலையில் இன்று இந்த வாரத்தில் நடந்த மிக முக்கிய பிரச்சினையான விஜய் வர்மா – பிரதீப் இடையேயான மோதல் குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். விஜய் வர்மாவின் மோசமான செயல்பாடுகளும் மிரட்டும் தன்மையும் கண்டிக்கத்தக்கது என்று கமல்ஹாசன் அவருக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாயா ”விஜய் மட்டுமே இவ்வாறு பேசவில்லையே?” என கேட்க அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் ”இது விஜய் மிரட்டும் வகையில் பேசியதற்காக மட்டுமல்ல. ஒருவரின் சோகத்தை கிண்டல் செய்து சிரிப்பது என்பது ஒரு மோசமான மனநிலை. நான் யாரைப் பற்றி எதை பற்றி சொல்கிறேன் என விஜய் வர்மாவுக்கு தெரியும். அவரோடு சேர்ந்து நின்று சிரித்தவர்களுக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

முந்தைய நாட்களில் பவா சொன்ன கதையை கேட்டு கண்கலங்கியபோதும் வேறு சில சமயங்களிலும் விஜய் வர்மா கூல் சுரேஷ் போன்றவர்கள் தனியாக சென்று அதை கிண்டல் செய்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

To Top