Movie Reviews
எதிர்பார்ப்பை சரி செய்ததா மெய்யழகன்.. திரைப்பட விமர்சனம்..!
தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் வெற்றி நடிகராக இருந்தவர் யார் நடிகர் கார்த்திக்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் துவங்கி சர்தார், விருமன் என்று கார்த்தி நடித்த எல்லா படமும் வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வகையில் தற்சமயம் கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம் மெய்யழகன்.
இந்த திரைப்படத்தை 96 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருக்கிறார். 96 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மெய்யழகன் படம் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
படத்தின் கதை:
அதேபோல உறவுகளை குறித்து பேசும் முக்கியமான திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. அரவிந்த் சாமியை முதலில் முக்கிய கதாபாத்திரமாக வைத்து கதை துவங்க ஆரம்பிக்கிறது. சொந்தக்காரர்களை பார்ப்பதற்கு பல வருடங்கள் கழித்து அரவிந்த்சாமி தன்னுடைய ஊருக்கு செல்கிறார்.
அங்கு அவர் சந்திக்கும் நபர்கள் அதை வைத்து கதை செல்கிறது இந்த படத்தில் கார்த்தி ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடத்திருக்கின்றனர். படம் முழுக்க முழுக்க சொந்தங்கள் எவ்வளவு முக்கியமானவை சொந்தங்கள் கொடுக்கும் நன்மை என்ன என்று உணர்வு ரீதியான திரைப்படம் செல்கிறது மெய்யழகன் திரைப்படம்.
இந்த படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியிருக்கிறது கண்டிப்பாக இது ஒரு வெற்றி படமாக அமையும் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்