ஒரு கை சோறு கொடுத்ததற்காக நண்பரை லட்சதிபதியாக்கிய எம்.ஜி.ஆர்!.. யார் அந்த நண்பர் தெரியுமா?

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பலருக்கும் பல வகையான உதவிகளை செய்தவர் நடிகர் எம்.ஜி.ஆ.ர் அவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருந்ததற்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல அவர் தமிழகத்தையே ஆள்வதற்கும் அவருடைய வள்ளல் குணமே காரணமாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக எம்.ஜி.ஆர் அவருக்கு நல்லது செய்த யாரையுமே மறக்காமல் இருப்பாராம் அவர்களுக்கு அவர்கள் செய்ததை விட பெரிதாக நன்மைகளை செய்யக்கூடியவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடக குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளார்.

Social Media Bar

அந்த காலகட்டத்தில் அவரது நண்பரான சின்னப்ப தேவர் என்பவர் இவர்கள் வீட்டில் அரிசிக்கு வழியில்லாத காலகட்டங்களில் அரிசி வழங்கி உதவி செய்துள்ளார். அதன்பிறகு சின்னப்ப தேவர் பத்தாயிரம் ரூபாய் கையில் எடுத்துக் கொண்டு சென்னைக்கு சென்று நாமும் தயாரிப்பாளர் ஆகலாம் என்று கிளம்பினார்.

அந்த சமயத்தில் எம்.ஜிஆ.ர் ஏற்கனவே சினிமாவில் பெறும் நாயகனாக இருந்தார், அப்போது வந்த சின்னப்ப தேவருக்கு ஒரு படத்தை நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். தாய்க்குப்பின் தாரம் என்கிற அந்த திரைப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் எம்.ஜி.ஆர் நடித்து கொடுத்தார்.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????

படம் நல்ல ஓட்டம் ஓடிய பிறகு எனக்கு சம்பள காசு கொடுத்தால் போதும் என்று கூறினார். அந்த படத்தின் மூலமாக சின்னப்ப தேவருக்கு முப்பதாயிரம் ரூபாய் லாபமாக கிடைத்தது. அதை வைத்து திரும்ப படங்களை தயாரிக்க தொடங்கிய சின்னப்ப தேவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரானார். அவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர் அடைவதற்கு உதவியவர் எம்.ஜி.ஆர்தான்.