Connect with us

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

Cinema History

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்த திரைப்படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. அதனாலேயே இப்போது வரை ரஜினிகாந்தின் உயரத்தை இன்னொரு நடிகர் பிடிப்பது கடினம்.

ரஜினிகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் அவரது சம்பளமும் அதிகரித்து வந்தது. அந்த சம்பளத்தை கொண்டு நிறைய சொத்துக்களை அப்போது அவர் வாங்கி வந்தார். இப்போது இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையும் கூட அந்த சமயத்தில்தான் அவர் கட்டியிருந்தார்.

ஆனால் அந்த மண்டபத்தை அவர் வாங்கும் சமயத்தில் அவருக்கு சில பிரச்சனைகள் இருந்தன. அந்த இடத்தை வாங்குவதற்காக நிலத்தில் உரிமையாளரிடம் அட்வான்ஸ் பணத்தை ரஜினி கொடுத்திருந்தார். ஆனால் அந்த விஷயம் தெரியாமல் நில உரிமையாளரின் உதவியாளர் மற்றொரு ஆளிடம் அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டார்.

இதனால் அந்த இடம் யாருக்கு என்கிற பிரச்சனை வந்தது. ரஜினி விட்டுக்கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் விஷயம் என்.ஜி.ஆரின் காதுக்கு சென்றது. அந்த நில உரிமையாளர் எம்.ஜி.ஆருக்கு தெரிந்த நபர். எனவே அவர் நில உரிமையாளருக்கு போன் செய்து அந்த இடத்தை ரஜினிக்கு எழுதி கொடுங்கள் என கூறிவிட்டார்.

அதற்கு முன்பு எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் பிரச்சனை இருந்தது. இருந்தாலும் தக்க சமயத்தில் அவருக்கு உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.

To Top