Latest News
தமிழ் சினிமாவில் முதல் ஏ சர்டிபிகேட் படம் எம்.ஜி.ஆர் நடிச்சதா?.. இதுதான் காரணமாம்!.
ஒரு படம் திரையரங்கில் வெளியாகிறது என்றால் அதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன.
அந்த வகையில் சில படங்கள் பார்ப்பதற்கு தகுதியான படங்கள் தானா? என்று மத்திய திரைப்பட வாரிய உறுப்பினர்களால் முதலில் பார்க்கப்பட்டு அவர்கள் அனுமதித்து சான்றிதழை வழங்கிய பிறகுதான் திரையரங்குகளில் படம் வெளியாகும்.
விதிமுறை
இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அல்லது ஆவண படங்கள் போன்ற எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும், அதனை மத்திய திரைப்பட வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு அதற்கு சர்டிபிகேட் வழங்கிய பிறகுதான் திரையரங்குகளில் அந்த படம் வெளியாகும்.
அந்த வகையில் திரைப்பட வாரி உறுப்பினர்களால் வழங்கப்படும் சர்டிபிகேட் மூலம் ஒரு படம் குறிப்பிட்ட வயது உடையவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படமாகவும், சில படங்களை குழந்தைகள் பார்க்க உகந்தது இல்லை என சென்சார் ஒரு வரையறை வைத்திருக்கிறது.
அந்த வகையில் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்குவதற்கு சென்சாருக்கு முழு உரிமை இருக்கிறது.
ஏ சர்டிபிகேட் பெற்ற முதல் திரைப்படம்
ஏ சர்டிபிகேட் என்பது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கப்படும் படம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏ சர்டிபிகேட் பெற்ற முதல் படமாக 1951 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான மர்மயோகி திரைப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் படம் என்றால் அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்பு இருக்கும்.
அதிலும் எம்ஜிஆர் நட்சத்திர நாயகனாகவும், அவர் நடித்த படங்களை அனைவரும் குடும்பத்துடன் பார்ப்பார்கள். மேலும் அவருக்கு மக்கள் மத்தியில் நடிகராகவும், அரசியல் தலைவராகவும் பெரும் வரவேற்பு இருந்தது.
இந்த இந்தப் படத்தை கே ராம்நாத் இயக்க எம்.ஜி.ஆர் சிறுகளத்தூர் சாமா போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.தமிழ் திரைப்படமான மர்மயோகி படத்திற்கு எதற்காக ஏ சர்டிபிகேட் கொடுத்தார்கள் என பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
மர்மயோகி திரைப்படத்தில் ராஜா ஒருவர் பேயாக வருவது போல காட்சிகள் வரும். அதனால்தான் அந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்ததாக சித்ரா சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்