அந்த பொண்ணை பாட வைக்கலைனா உன்ன படத்தில் இருந்து தூக்கிடுவேன்!.. இசையமைப்பாளருக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..

திரைத்துறையில் முடிசூடா மன்னனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பிரபலமாக இருந்தப்போது அவர் நடிக்கும் படத்தில் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்தது.

எனவே எம்.ஜி.ஆர் படத்தில் வேலை பார்க்கும் பலரும் அவரிடம் பயபக்தியுடன் இருந்து வந்தனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சிறு தவறுக்கூட அவர்களுக்கு பட வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும் அபாயம் இருந்தது.

அதே போல படத்தின் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என எந்த ஒரு விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் குறுக்கீடு இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு அனைத்தையும் நுட்பமாக பார்ப்பவர் எம்.ஜி.ஆர்.

Social Media Bar

இந்த நிலையில் உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தப்போது எம்.எஸ்.வி அந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வானார். அந்த படத்தில் வாரேன் வழி பார்த்திருப்பேன் என்கிற பாடலை பாடுவதற்காக பாடகி டி.கே கலா வரவழைக்கப்பட்டிருந்தார். அவர் ஏற்கனவே எம்.ஜி.ஆர் படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார்.

ஆனால் அவரது குரல் எம்.எஸ்.விக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. குரல் குழந்தை தனமாக தெரிகிறது என கூறியுள்ளார் எம்.எஸ்.வி. அதை கேட்ட எம்.ஜி.ஆர், டி.கே கலா பாடிய வேறொரு பாடலை போட்டு காட்டியுள்ளார். இந்த பாடலை டி.கே கலா ஜேசுதாஸுடன் இணைந்து பாடியுள்ளார். அந்த குரல் குழந்தை தனமாக தெரிகிறது என்கிறீர்கள்.

சரி இஷ்டமிருந்தால் அவரை பாட வையுங்கள் இல்லை என்றால் நான் இசையமைப்பாளரை மாற்றி கொள்கிறேன் என நேரடியாக கூறியுள்ளார். அதனை கேட்டு எம்.எஸ்.வி எதற்கு வம்பு என அவரை வைத்தே பாடலை தயார் செய்துள்ளார்.

இந்த விஷயத்தை டி.கே கலா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.