Cinema History
அந்த ஒரு வார்த்தைதான்!.. எம்.ஜி.ஆரை கண்ணீர் விட்டு அழ வைத்த காமராஜர்!..
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு பொது மக்களுக்கும், நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் நிறைய நன்மைகளை செய்தார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த சமகாலத்தில்தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததில் பெரும் பங்காற்றிய பல தலைவர்களும் வாழ்ந்து வந்தனர்.
அதனால் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பொது மக்கள் பலருக்கும் தினசரி தனது வீட்டில் அறுசுவை விருந்து கொடுத்து கொண்டிருந்தார். சாப்பிட நினைக்கும் யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்து உணவு சாப்பிடலாம்.
எம்.ஜி.ஆர் அங்கு நல்ல சாப்பாடு கொடுக்கிறார் என்பதால் பெரிய பிரபலங்கள் கூட எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு அந்த உணவு எப்படியிருக்கிறது என்று அறிவதற்காக அதை உண்டுவிட்டு சென்றனர். ஆனால் அப்போதைய முக்கியமான தலைவரான காமராஜர் இதுக்குறித்து எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.
இது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இந்த நிலையில் காமராஜரை ஒரு நாள் நேரில் சந்தித்து பலமுறை உணவு உண்ண அழைத்தும் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள் என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார்.
நீ உன் வீட்டில் கறி,மீன் எல்லாம் சமைத்து நல்ல அரிசியில் சாப்பாடு போடுகிறாய் என கேள்விப்பட்டேன். அதையெல்லாம் நான் சாப்பிட்டால் பிறகு என் வீட்டில் சாப்பிடும் ரேசன் அரிசியை எனக்கு சாப்பிட பிடிக்காமல் போய்விடும் என கூறியுள்ளார் காமராஜர்.
இதனை கேட்ட எம்.ஜி.ஆர் அங்கேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தும் ரேசன் அரிசியை சாப்பிடுகிறாரே என மனம் வருந்தினாராம் எம்.ஜி.ஆர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்