Tamil Cinema News
சூப்பர் ஹீரோ படத்தை லோ பட்ஜெட்டில் எடுக்க செஞ்ச வேலை.. பெரிய இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்.!
பொதுவாகவே சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே படத்தின் பட்ஜெட் என்பது மிக அதிகமாக இருக்கும். இதனாலேயே தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் பெரிதாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மீது கவனம் செலுத்துவது கிடையாது.
இப்போது வரை உலக அளவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவது ஹாலிவுட் சினிமா மட்டும் தான். ஆனால் தென்னிந்தியாவில் பெரிதாக பட்ஜெட்டே இல்லாத சினிமாவான மலையாள சினிமாவில் வந்த ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் மின்னல் முரளி.
இப்பொழுது பிரபல நடிகராக இருந்து வரும் பாஸில் ஜோசப்தான் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். மின்னல் முரளி திரைப்படத்தின் பட்ஜெட் என்பது பலருக்கு அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. 18 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம்தான் மின்னல் முரளி.
தமிழ் சினிமாவிலேயே இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எடுக்கப்பட்டது கிடையாது மின்னல் முரளி திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் மிக வேகமாக ஓடுவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டிருந்தது.
அதில் அவர் அங்கு நிற்கும் கார் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை விடவும் வேகமாக செல்வார். இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்து பாசில் ஜோசப் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு பிளைவுட் மரத்தை நீட்டமாக வைத்துக் கொண்டு அதற்கு கீழே வண்டி டயர்களை மாட்டி வைத்தோம்.
அதை நாங்கள் வேகமாக இழுத்து சென்றோம் அதன் மேல் நின்று கதாநாயகன் ஓடும்பொழுது கதாநாயகன் மிக வேகமாக ஓடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கினோம். அந்த படத்தில் மொத்தமே அந்த காட்சி 5 நொடிதான் வரும் என்பதால் மக்களும் கதாநாயகன் வேகமாக ஓடுவதாக நம்பி விட்டார்கள் என்று அந்த காட்சி குறித்து விவரித்து இருக்கிறார் பாசில் ஜோசப்.
இந்த மாதிரியான காட்சிகளை கிராபிக்ஸ் மூலமாக எடுப்பதற்கு அதிக செலவுகளை செய்து வரும் நிலையில் இவ்வளவு எளிமையாக அந்த காட்சியை எடுத்திருக்கிறார்
