News
சினிமாவில் பெரிய காம்போவில் வரவிருந்து மிஸ்ஸான திரைப்படங்கள்.. இதோ லிஸ்ட்.
சினிமாவில் பல படங்கள் வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் அல்லது நடிகைகளை மட்டும் வைத்து தொடர்ந்து படங்களை கொடுத்து வருவார்கள்.
ஏனென்றால் இவர்களின் காம்போவில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்த திரைப்படங்களையும் குறிப்பிட்ட இயக்குனர்கள் அந்த நடிகர் நடிகைகளை மட்டும் வைத்து எடுத்து வருவார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்கள் இவ்வாறு பெஸ்ட் காம்போவில் பல படங்களை கொடுத்து வெற்றிகளை பெறும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ஒரு சில காம்போவில் படங்கள் எடுக்கலாம் என நினைத்து அதன் பிறகு அந்த படங்களை கைவிட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி மற்றும் ஜேசன் மோமோ

தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வெளிவந்த திரைப்படம் என்றால் அது பாகுபலி. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் பதிந்த நிலையில் அதில் நடித்திருந்த வல்வால் தேவன் என்னும் கதாபாத்திரம் தற்போது வரை யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கிறது.
நிலையில் தான் அந்த கதாபாத்திரத்திற்கு ராஜமவுலி கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நடித்த ஜேசன் மோமோ எனும் நடிகரை முதலில் நடிக்க வைக்க இருந்ததாகவும், ஆனால் அவர் அக்வாமேன் படத்தின் பிஸியாக நடித்து வந்ததால் நடிகர் ராணாவை அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தால் பாகுபலி இன்னும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
சூர்யா மற்றும் கார்த்தி

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை தமிழில் எடுக்கலாம் என இயக்குனர் லோகேஷ் நினைத்திருந்ததாகவும், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என அவர் நினைத்திருந்ததாகவும் சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியாமல் சென்று விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி மற்றும் இளையராஜா

இளையராஜா ஒரு நேரலையில் கூறியிருக்கும் செய்தி ஆனது, ரஜினி நடிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா திரைப்படத்தை முதலில் நான் தான் இயக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
