Tamil Cinema News
எம்புரான் படத்தில் 17 காட்சிகள் நீக்கம்.. மன்னிப்பு கேட்ட படக்குழு.!
சமீபத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மலையாளத்தில் வந்த லூசிபர் என்கிற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகதான் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது.
எம்புரான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது எம்புரான் திரைப்படம். அதே சமயம படம் குறித்த சில சர்ச்சைகளும் உண்டாகின.
அதாவது எம்புரான் திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் மத கலவரம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. எனவே இந்து மத அமைப்புகள் அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கலைப்படைப்புகளின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது பாசிச மனநிலை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் மோகன் லால் தனது எக்ஸ் தளத்தில் அந்த காட்சிகளை நீக்குவதாக ஒப்புக்கொண்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். எனவே படத்தில் இருந்து மொத்தம் 17 காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஓ.டி.டியில் வரும்போது இந்த நீக்கப்பட்ட காட்சிகள் இருக்குமா? இருக்காதா? என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது.
